இருப்பவர்களாகிய நாம் இல்லை பற்றி சிந்திப்போமா
முப்போகம் விளைந்த நிலமடா இது...
இப்போது,
ஒரு போகம் விளையவே தடுமாறுது
பாரு...
அறிவியலின் வளர்ச்சி கண்டோம்...
தொழிற்சாலை பல கொண்டோம்...
விவாசாயத்திற்குத் தண்ணீரில்லை,
ஆறுகளையெல்லாம்,
தனிவுடையாய் தனியார் நிறுவனங்கள் அபகரித்ததாலேயே...
என்னடா நாடு இது??
ஊருக்கு உணவளித்தவரெல்லாம் செத்து போகிறார்,
தனது பசியாற்ற உணவில்லாமலேயே...
குளிர்பானங்களில் மீது கொண்ட மோகத்தால்,
ஆரோக்கியம் தரும் இளநீரை மறுக்கிறோம்...
பசி ஒரு கொடிய நோய்...
அதற்கு இருப்பவன், இல்லாதவனென்ற பாகுபாடில்லையே...
என்னடா செய்ய போகிறோம்,
கண்ணீர் விட்டு கதறுவதை தவிர?...
பதுக்கியவனுரைக்கிறான் தனது உழைப்பாலே
முன்னேற்றத்தின் உச்சம் பெற்றேனென்று...
ஆனால், நாளும் நேர்மையாக உழைப்போருடைய
வாழ்வில் முன்னேற்றமேதும் நிகழவில்லையே...
ஒருவருடைய வீழ்ச்சியில் மற்றவர் வெற்றி காணும் நிலையை உருவாக்கியவன் அந்த உண்மைப் பரம்பொருளாயின்,
அவனுக்கும் அழிவுண்டு...
நெஞ்சம் கலங்குதடா...
தானிருப்பதோ குடிசை வீடு...
வறுமையில் தனது வயிற்றுப் பசி தீர்க்க,
ஆடம்பரவாதிகளின் கட்டிடங்களுக்கு,
செங்கல், சிமெண்ட், கருங்கலென சுமந்துழைப்பவர்களின் வாழ்வில் என்று தான்
விடியல் வருமோ???...
நெசவுத்தொழிலில் எவ்வளவு கவனம் வேண்டும்?..
தெரியுமா??...
மிக சுலபமாக ஆடை கிழியும் முன்பே தூக்கி எறிந்துவிட்டு,
புது புது ஆடைகள் வாங்கி அணியும் நாம்
தனது கிழிந்த ஆடைகளை மாற்றுவதற்குக் கூட கஷ்டப்படுபவர்களைப் பற்றிச் சிந்திப்போமா???...