வாழ்க்கை செல்லாமல் போகும் சதியோ விதி

*
கடவுளிடம் நான் கேட்டேன்
இவ்வுலகை வெல்ல என்ன செய்ய வேண்டும்?

கடவுள் என்னிடம் கூறினார்
உன் மூச்சினை நிறுத்தி விடு

ஆனால் நான் தோற்றுக்கொண்டிருப்பது தான் உன் சித்தமோ
பின் அது தானே வாழ்க்கை.
*
மோடியிடமும் கேட்டார்கள் போல்
இந்தியர்கள் எப்படிப்பணக்காரர்களாவதென

ஐநூறு ஆயிரம் செல்லாதொழியட்டுமென்றார்
பணக்காரன் எல்லாம் ஏழையானான்
ஏழையெல்லாம் பிச்சைக்காரனாய் ரோட்டில் நின்றான்
பின் இது தானே வாழ்க்கை.
*
புத்தன் சொன்னான் ஆசையைத்துறவென்று
மனிதனுக்கு அது மட்டும் புரியவில்லை

கஷ்டப்பட்டு மெதுவாக மேலே ஏறி சென்றாலும்
சறுக்குவதா வாழ்க்கை,?
விதியால் சறுக்கினால் கூட தாங்கிக்கொள்ளும் மனதுக்கு
சதியினால் சறுக்கும்போது ஏனோ தாங்கிக்கொள்ள முடிவதில்லையே?

எழுதியவர் : செல்வமணி (30-Nov-16, 11:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 351

மேலே