நகைச்சுவை -- சிந்திக்க, சிரிக்க -ஒரு ரேஷன் கடையில் மக்கள் கொந்தளிப்பு
ஒரு ரேஷன் கடையில காலங்கார்த்தால
நடந்த சம்பவம் (கற்பனையில்)
ரேஷன் கடைக்காரர் ஏம்மா உங்களுக்கெல்லாம் சொன்னா
புரியாதா ? ஒழுங்கா கியூ ல நில்லுங்க
குடுக்கறத வாங்கிட்டு போங்க ...........
வாங்கவந்த ஜனங்கள் : ஏன்யா இப்போ ஒழுங்கு சட்டம் பேசறய்ய நாலு நாளா
கால் கடுக்க நின்னோம் ஸ்டாக் இல்ல இல்லேன்னு சொல்லி
அனுப்பிகிட்டு, இன்னிக்கு என்னமோ சட்டம் பேசற ...........
கடைக்காரர் : தம்மே இன்னிக்கு என்ன குடுக்கறமோ அதை வாங்கிக்கின்னு
கம்முனு இடத்தை காலி பானு புரியுதா ......................
ஜனங்க : என்னையே குடுக்கற....நிணைஞ்சு போன சக்கர அலுக்கோட,
கல்லும் மண்ணும் கலந்த பருப்பு, சாப்பிட முடியாத அரிசி
என்ன பாட்டாளி மக்கள்;ந அவ்ளோ இழிவா போச்சா ...
நாங்க உழைச்ச தான் உனக்கு சாப்பாடு தெரிஞ்சுக்கோ......
இன்னிக்கு நாங்க குடுக்கறோம் நீ வாங்கிக்கோ ............
ஏய் எல்லாம் வாங்கடி இங்கே அந்த மொறம், தொடப்ப கட்ட
விடுவாங்க .....................
கடைக்காரன் : என்ன கலாட்டா வா ............
ஜனங்க : கடைக்காரன் வாய மூடறதுக்குள்ள .......பெண்கள் தடைப்பதாலும்
முறத்தால் அவனை சாட.............. அவன் குடுத்த கலப்பட
பொருட்களை அங்கேயே விசிறி கடாசி ..............இனிமே கலப்பட
பொருள் வித்த உங்கடைய மூடவேண்டியது தான் ..............
நீ குடுப்பதையே வாங்கி பழகிப்போன நாங்க
இப்போ குடுக்கறோம் வாங்கிக்க .......... இன்னும் முறத்தால் அடிக்க .!!!!!!
கடைக்காரன் கடைய மூடிட்டு ஓடறான் ........!!!!!!!!!!!!!!!!
( இது மக்கள் ஆட்சி ...................... ஜாக்கிரதை ............ ஜனங்க ஆரவாரம் )
(பெண்கள்)