நகைச்சுவை- சிரிப்பின் அவசியம் வாழ்க்கையில்

வைத்தி தன வீட்டில் நாடு ஹாலில்
ஞாயிற்று கிழமை காலையில்
ஆடி, பாடி, சிரித்து கொண்டிருக்கிறார்
அவர் நண்பர் அனந்து அப்போது
வைத்திய பார்க்க வருகிறார் .

வைத்தி வீட்டு வாசலில் அனந்து
காலிங் பெல் அழுத்துகிறார்............
கதவு திறக்கிறது, அனந்து மனைவி
மரகதம் கதவு திறந்து, வாங்கோ
அண்ணா வாங்கோ , இருக்கார்
வாங்கோ .........................

அனந்து : என்னடா வைத்தி, உன்ன பார்த்து
பத்து பதினைந்து நாட்கள் ஆகிறது
அதான் இன்னிக்கு லீவு நாள் தானே
இந்தப்பக்கம் வந்தேன் அப்படியே உன்னையும்
பாத்துட்டு போலாம்னு .........
ஆமான் இது என்ன கோலம்..... நீ ஏ ஆடிண்டு,
பாடிண்டு, சிரிச்சிண்டு............. என்னடா இது ?


மரகதம் : அது ஒன்னும் இல்ல அண்ணா, இவர் ரெண்டு வாரமா
நம்ம எலியட் பீச் சிரிப்பவர் சொசைட்டி னு ஒன்னு இருக்கு
அதுல மெம்பெர் ஆயிட்டு வாழ்க்கையில் சிரிப்பின்
அவசியத்தை கத்துக்குறார் அவ்ளோதான்...........இவரை
எங்காத்துல உம்னா மூஞ்சின்னு தான் பேரு........எப்பவும்
கைல புஸ்தகம்,பேப்பர் ,வாய தொறக்க மாட்டார் ,அதி பூத்தாப்போல
எப்பவுது சிரிப்பு.................... இப்போ பிரஷர் ,சுகர் னு வரச்சே
ஸ்ட்ரெஸ் கூடாது னு டாக்டர் சொல்லச்செ தெரியறது
ரெலாக்ஸ்சா இருப்பதன் அவசியம்.........................
தானே சிரிக்க தொடங்கி இருக்கார்............ஏதோ இப்போதாவுது
தோணித்தே................... நீங்க என்ன சொல்லறேள் அண்ணா........


அனந்து
: ஹா.... ஹா.............. ஹா.................(விழுந்து விழுந்து சிரிக்கிறார்
மரகதமும் சேர்ந்து சிரிக்க, வைத்தி , சிரிப்பு நிறுத்தி ,
ஹை அனந்து வாடா எப்போ வந்த ............. உட்காந்துக்கொ; மரகதம்
ரெண்டு பேருக்கும் கொஞ்சம் காபி தாயேன்........... மரகதம் உள்ளே போறா)

சிரித்து வாழ வேண்டும் தோழா ...................... ஆனால் சிலர்
சிரிக்க வாழ்ந்திடாதே னு...................... கவிஞர் சொன்னது
எவ்ளவு கருத்து பொதிந்த பாடல்...................... வைத்தி
உனக்கு மட்டும் இல்ல நம்ம எல்லார்க்கும் சிரிப்பின்
ரகசியம் என்னனு ரெண்டே வரிகளில் சொல்லிட்டு போய்ட்டார்.....

வா இன்னிக்கு நானும் உன்னோடு கொஞ்சம் சிரிக்கிறேன்
என் மனச லேசாகிக்கிறேன் (அவர் கஷ்டம் அவர்க்கு தெரியும்)..........!!!!!!!!
இருவரும் சிரிக்க, காபி வர பருகி விட்டு ,அனந்து பை பை சொல்லிட்டு
போகிறார்

"இடுக்கண் வருங்கால நகுக .............." வள்ளுவர் குறள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-16, 5:01 am)
பார்வை : 339

மேலே