பேராசை முனியம்மா
வீட்டுக்காரம்மா வேலைக்காரியிடம்
மாத சம்பளம் பட்டுவாடா -ஒரு சிறு உரையாடல்
--------------------------------------------------------------------------------
வீட்டுக்காரம்மா : இதோ பாரு முனியம்மா, இந்த மாத சம்பளம் உனக்கு
எப்படி கொடுப்பதென்று யோசிச்சின்றிக்கேன் ............
வேலைக்காரி முனியம்மா :இதுல யோசிக்க என்னமா இருக்கு
எப்பவும் போலவே குடுங்க ...........
வீட்டுக்காரம்மா : அதுக்கில்லடி, என்கிட்டே எல்லாமே
புது ரெண்டாயிரம் நோட், ஐநூறு நாடுதான் இருக்கு
உனக்கு ரெண்டாயிரத்து எரநூறு எப்படி கொடுப்பேன்....
முனியம்மா : அம்மா, இது என்ன பிரமாதம் மா........
இந்த மாசத்துலேந்து சம்பளம் ரெண்டாயிரத்து ஐநூறு னு ஆகிடுங்க
அவ்ளோதான்- ஒரு ரெண்டாயிரம், ஒரு ஐநூறு நோட்டு குடுங்க ....
எப்படி என் ஐடியா......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!