தமிழ்

அன்னைத் தமிழே அன்பின் மொழியே...
ஆசைத் தமிழே ஆருயிர் நீயே...
இசைத் தமிழே இன்னுயிரும் நீயே...
ஈகைத் தமிழே ஈன்றவள் நீயே...
உயிரின் தமிழே உணர்விலும் நீயே...
ஊக்கந்தரும் தமிழே ஊற்றுநீரும் நீயே...
எங்கும் தமிழே எதிலும் தமிழே...
ஏழ்சுரங்களில் தமிழே ஏற்றந்தரும் தமிழே...
ஐமுகனின் தமிழே ஐங்கரனுள்ளும் தமிழே...
ஒளிதரும் தமிழே ஒலிதருவதும் நீயே...
ஓவியத்தின் தமிழே ஓவியமும் நீயே...
ஔவையின் தமிழே ஔடதமும் நீயே...
அஃது இல்லாது என்னுயிர் வாழாதே.....

எழுதியவர் : இதயம் விஜய் (3-Dec-16, 8:31 pm)
Tanglish : thamizh
பார்வை : 326

மேலே