கண்ணீரில் தமிழகம்

சொல்லாத் துயரம் கொண்டது தமிழகம் சாய்ந்தது ,
சரித்திரம் வீழ்ந்தது

வேதனை வாசமே தமிழகம் யாவுமே
சிந்தனையும் சிந்துதே கண்ணீரை
சாய்ந்தது ஏனோ?

பெண்மணி எங்கள் கண்மனி போலவே,
எங்கள் நெஞ்சில் நின்ற
நீங்கா தலைவியே அம்மா...

எங்களை பின்னடத்திய பெருந்தலைவி
என்றுமே புரட்சி தலைவி அம்மா...

கண்டதில்லை யாருமே மண்ணலே
உன்னைப்போல் எங்குமே
சாய்ந்தது ஏனோ?
கோடியில் ஒருத்தியம்மா நீ...

அரசியல் சாசன
வரலாறே வியந்து போன தமிழனின்
தன்மான தலைவி அம்மா...
உரக்கம் கொண்டாயே உடன்
தமிழகம் வீழ்ந்ததே
தலைவி உங்களுடனே.,

இன்று வீதிகள் தோறும்
கண்ணீரில் மிதக்கிற பூவிதழ்கள்
வேதனை வாசம் பூண்டது மண்ணில்
பொக்கிஷம் போனதே, என் செய்வேன்.,

அரசியல் அலங்காரம் அனைத்துக் கொண்ட
மாபெரும் தலைவி
மக்களின் மனசாட்சி மாணிக்க தலைவி
மாண்டது ஏனோ?

முடிவை கொண்டு வந்த
முட்டாள் இருந்தானோ
மரணம் சொல்லி வைத்த
மடையன் எவன் தானோ
அரை நொடியில் அசைந்து போனதே
அரசியல் ஆலமரம் இங்கே
இனி போர்திறன் கொண்ட போர்வாள் வருமா?
புதைந்தது மண்ணிலே ஐயகோ இறைவா...,

சரித்திரம் சாய்ந்ததே இறைவா
கொண்டு கொடுத்தாலும் கோடி
கொட்டி கொடுத்தாலும் இங்கு
எங்கள் தலைவி எங்கள் இதயம்
புரட்சித் தலைவி அம்மா...

வீழ்ந்தது விதையல்ல
அரசியல் சரித்திரம் -இதை
ஈடு செய்ய இறைவனாலே முடியாது
தலைவிக்கு நிகர் எங்கள் தலைவி
புரட்சித் தலைவி அம்மா...,

எழுதியவர் : கலைவாணன் (6-Dec-16, 11:05 pm)
சேர்த்தது : கலைவாணன்
பார்வை : 2506

மேலே