தோழன்
தோழன் தோள்கள் இமயச் சிகரம்
தோல்வி கண்டால் தோளை கொடுப்பான்
துயரம் கண்டால் உயிரே கொடும்பான்
வாழ்க்கை பயணம் யாருடனோ
அங்கே,
தோழன் ஒருவனே தோள் கொடுப்பான்
எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும்
தோழன் இல்லா வாழ்வதில்
தோல்வி நிச்சயமே...
மனிதன் மனமோ ஆயிரம் - அதில்
நண்பன் ஒருவன் கிடைத்தாலே
இதயத்தின் வலியை சுமப்பானே
எந்தன், இன்பம் துன்பம் யாவுமே
நண்பன் ஒருவன் அறிவான்
கடலை போன்றது நட்பு
அதன் அலைகள் மொத்தமே அன்பு
மாற்றம் எதுவும் இல்லாத
கலங்கம் இல்லா நட்பு,
வேதனை,
என்று நான் நிற்க
கண்ணீர் சிந்தி வருவான் தோழன்
கடைசி நிமிடம் இருந்தாலும்
கைகள் கோர்த்து நிற்பான்
விலை கொடுத்து வாங்கிட
நண்பன் நட்பு கிடைக்குமா
இறைவன்,
அவனும் நண்பனே
எனக்கு நண்பனை கொடுத்த நண்பனே
வாழ்க்கை வாழ ஆயிரம்
அதில் நட்பு ஒன்றுதான் தூய்மையே,,,
-கலைவாணன்