கலங்காதே தம்பி
![](https://eluthu.com/images/loading.gif)
ஏனடா கலக்கம் என் தம்பி
வேதனையில் விழுந்தாயோ எனை நம்பி
சத்தியம் ஒரு நாள் நிச்சயம் ஜெயிக்கும்
விட்டுவிட கூடாது
என்றைக்கும் தன்னம்பிக்கை
ஒரு நாள் வருவேன்
உயர்வாய் உன் முன்னால்
ஏசட்டும் சுற்றத்தார்
எண்ணிய பேர்கள் இருந்தும்
வெறுமையே பார்த்தோம்
காலத்தின் கணக்கில்
பிழை ஏதும் இருக்காது
விடை வரும் ஒருநாள்
விடை கொடுப்போம்
நம் சோகத்திற்கு
மனிதனாய் பிறந்தாலே
சோதனை கூடவரும்
புனிதனாய் மாறும் வரை
பொறுமையாய் இரு தம்பி
பயணத்தை முடிக்கும் வரை
பத்திரமாய் இரு தம்பி
வேலை செய்யும் பொழுதெல்லாம்
கவனமாய் இரு தம்பி
நம் தாயிடம் சொல்..,
'என் அண்ணன் வருவான்
உன்னிடம் இழந்ததை தருவான்
மிஞ்சிய பொருளோடு
இன்பமாய் நீ உரங்கு'
எத்தனை வார்த்தைகள்
ஈட்டிபோல தொடுத்தாலும்
வணங்கி நிற்பேனே, தவிர
ஒரு நாளும்
குத்திட்டு மடியேன்
கண்ணீரை துடைத்துக்கொள்
உறையும் முன் வந்துவிடுவேன்
_ இப்படிக்கு
அன்பு அண்ணன்