எனக்காக பூத்தவள்

வானத்தில் பூத்த பூ வா -
இல்லை
வயல் வெளி சேர்த்த
சொத்தா
வார்த்தை இல்லை
உன்னழகு -அனாலும்
வியக்குறேன் உனை கண்டு

ஏய் பெண்ணே
யார் வடித்த சிலை -நீ
வா முன்னே உன்
அழகை நான் ரசிக்க
பூ வின் மேனியா - இல்லை
புன்னகை தேவியா
வாடமுன் வந்து -நீ
வர்த்தை ஒண்டு பேசடி

வயலோர காத்து வந்து
காதல சொல்ல முன்பே
உன்மேல என்காதல
உரைத்தி சொல்லிடுவன்
மயிலே உன்சிரிப்பு
வாய்க்கள்கல் ரசிக்குதடி
வரப்புல நீ இருக்க
உன்வவயசோ குறையுதடி

காதலன் நான் இருக்க
களவாட பாக்குதுகள்
மோதல் வந்தாலும்
முழுசா உனை மீட்பன்
உன்மனசில்என்காதல்
முழுமையாய்உள்ள -வரை
யாராலும் உன்னை
கவர்ந்து செல்ல முடியாது

எழுதியவர் : தே .பிரியன் (14-Dec-16, 12:14 pm)
பார்வை : 731

மேலே