தாளாத வலி

தலைமுடி ஒவ்வொன்றாக
தனித்தனியே பிய்த்தெடுக்கும்
தாளாத வலிபோலே
தவித்துவிடுகிறது
மனம்...!

உயிரின் அலைச்சுழல்
மிதமிஞ்சிய வேகத்தில்
சுழன்றுவிடுகிறது....!

உடலின் ஜீவகாந்தம்
வாரி வாரி
இரைக்கப்படுகிறது....!

ஓரிரு நிமிடங்களில்
அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்ள அறிவு
அல்லல் பட்டுவிடுகிறது....!

ஒரு குழந்தையின் அழுகுரலை நிறுத்துவதற்கு....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (14-Dec-16, 11:48 pm)
Tanglish : thaalaatha vali
பார்வை : 106

மேலே