அலைக்கழிக்கும் 500, 1000

செல்லாது என்றஒரு வார்த்தை தன்னால்
-------சேர்த்தபணம் தன்மதிப்பை இழந்த தாலே
பொல்லாத துயர்கண்ட மக்கள் நெஞ்சம்
-------பொங்கியெழும் நிலையில்தான் உள்ள தின்று
ஐநூறும் ஆயிரமும் இருப்போர் நாட்டில்
-------அங்குமிங்கும் அலைகின்றார் அதனை மாற்ற
ஐம்பதையும் அறுபதையும் தாண்டி னோரும்
-------அல்லல்படும் நிலைகண்டால் கண்ணீர் பொங்கும்


அன்றாடம் நடக்கின்ற தொழில்கள் எல்லாம்
-------அசைவற்ற மரம்போல நின்று பேச்சே!
என்றிந்த நிலைமாறும் என்றே மக்கள்
-------ஏக்கப்பெரு மூச்சுவிட்டு வங்கி முன்னே
நித்தம்தம் பணிவிடுத்து நிற்கும் காட்சி
-------நினைவினிலே நீங்காது இன்றும் என்றும்
சத்தமிட்டு முழங்குவதால் பயன்தான் என்ன?
-------சகித்துக் கொள்ளும் நிலையின்றி வழியுமென்ன?

பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (15-Dec-16, 5:56 am)
பார்வை : 59

மேலே