தெரிய நட்பு

தெரியாத நபரிடம் இருந்தது
என் பெயரை தாங்கி ஒரு செய்தி
அட என்று எப்பவும்போல அலட்சியம்
முகம்தெரியாத நட்பில்
தொடர்வோமோ இல்லையோ
என்ற நினைப்பில்
ஏதோ ஓன்று என்னை ஈர்க்க
நானும் அனுப்பினேன் செய்தி
எதிர்காலம் எதை ஏந்தி
வருகிறது என்றறியாமல்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (16-Dec-16, 2:17 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : theriya natpu
பார்வை : 277

மேலே