தடம் மாறிய மனம்
என்று தணியும்
உந்தன் கரிய விழிகளின்
கார்மேக கோபம் ,,,,,,
உந்தன் அசைவுகளை
நகலெடுத்து
பிரதிபலிக்கிறேன்
எந்தன் செயல்களில் ,,,,
உன் நகலென
நான் இருப்பதாய்
கேலி செய்யும்
நண்பர் கூட்டம் ,,,,
என் நினைவுகளில்
நிரம்பி வழியும்
நீர்துளிகளாய்
உந்தன் நினைவுகள் ,,,,
இதுவரை நானும்
கண்டதில்லை
பெண்ணே ,,,
மேதை
என்றே இருந்தேன்
பேதையாக்கி
உலவ விட்டவள் நீ ,,,,
கனவுகளில்
பவனி வந்தேன்
உறக்கமிலா இரவுகளை
பரிசளித்தவள் நீயடி ,,,,
இருந்தும்
உன் ரசனைக்குரியவனாய்
மாறி
உன்முன் நிற்கிறேன்
உன் கார்மேக கோபம்
கரைந்து
கருணை மழை பொழிவாயா ,,,,,,
பாளமென வெடித்த
நிலம்போல்
உன்னவன் காத்திருக்கிறேன் ,,,,, !

