sumathipalanisamy - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sumathipalanisamy |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 344 |
புள்ளி | : 76 |
மனிதில் தோன்றிய வார்த்தைகளை
அனைத்தையும் வடிவமாக்கலாம்
அந்த வடிவத்தை தாங்கும்
வலிமை இருப்பின்
கணவனோடும் குழந்தைகளோடும்
கதை பேசி சிரித்துச் செல்லும்
மனைவிகளை கனத்த மனத்துடன்
கண்ணீர் நிறைந்த கண்களோடு
கடந்து செல்லும் கைம்பெண்
பெண் என்பவள் தெய்வத்தின்
அம்சமாக பார்த்த காலம் போய்
வெறும் போகப் பொருளாக
பார்க்கும் காலத்தில் இருக்கிறோம்
என்பதில் எவ்வளவு முன்னேற்றம்
இதில் பெருமிதம் கொள்கிறது
இளைய சமுதாயம்
என்னுடைய வாழ்க்கைப்பயணத்தில்
உனக்கான தேடல் தான் அதிகம்
என்னுடைய தேடல் உன்னைச் சேருமா???
என்று தெரியவில்லை ஆனால்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
எந்த நிமிடமோ
எந்த நொடியோ
ஆனால் நிறைவு பெறும் என்று
காத்திருப்பேன் என் வாழ்வின்
கடைசி நொடிவரை
என் தேடலின் முடிவு
நீயாக இருப்பாய் என்று
தந்தையர் தின நாளிலாவது
அவர்களிடம் சற்று நேரம் பேசுங்கள்
உங்கள் வாழ்த்து அவர்களை வாழ வைக்காது
உங்கள் வார்த்தை அவர்களை வாழ வைக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
உன்னை மறக்க வேண்டும் என
நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவுகளுடன் தோற்றுப்போகிறேன்
எதிலிருந்து விடுபடவேண்டும் என
நினைக்கிறேனோ அதையே
மீண்டும் மீண்டும் நினைக்கிறேன்
பின் எங்ஙனம் உன்னை மறக்க
வாழ்க்கை பயணத்தில்
உயர்வும் தாழ்வும் தாங்கி
வாழவைப்போம் மற்றவரை
மௌனம் அழகானது ரசனையானது
பூக்களின் பூக்கும் தருணம் மௌனம்
நிலவு தோன்றும் தருணம் மௌனம்
சூரியன் உதிக்கும் தருணம் மௌனம்
காற்று வீசும் தருணம் மௌனம்
இயற்கையின் அனைத்தும் மௌனம் தான்
ஆனால் உன்னுடைய மௌனம் மட்டும் தான்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!
****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !
****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!
****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !
****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!