தனிமையும் இனிமையே
தினமும் தனியாக நடக்கிறேன்...
ஏனென்றால் சிலரின் வெறுப்பான பேச்சுக்கு
தனிமையே மேல் என்று தான்...
தனிமை தான் என் வாழ்வில் நிரந்தரம் என்றாயிற்று...
முதலில் அம்மா என்னை விட்டு சென்ற போது...
பின் அப்பா வேறொருவரை திருமணம் செய்யும் போது...
இப்பொழுது நீ என்னை விட்டு செல்லும் போது...
இருந்தும் உயிர் வாழ்கிறேன்...
தனிமை யின் இனிமையே
நினைவுகளை அதிகப்படுத்துவது தான்...
நினைவை இழக்க முடியவில்லை என்னால்...
அதனால் தனிமையை நேசிக்கிறேன்...
நான் வாழ்வது உனக்காக மட்டுமல்ல...
என்னை படைத்த கடவுளுக்காக...
ஏனென்றால்,,
இப்படி நினைத்து பார்க்காவது
ஒரு சொந்தத்தை கொடுத்தாயே!!! இறைவா... என்று..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
