வாழும் நெறிகளைக் கற்போம்
தூய அன்பு கொண்ட மனமென்னும் போதினிலே,
அமைதி பிறக்கும் வாழ்வினிலே...
நாமெல்லாம் சகோதரர்களென்ற போதினிலே,
சமத்துவம் பிறக்கும் உலகினிலே....
உடன்பிறப்புகளுக்கு உதவ கைகள் நீளும் போதினிலே,
இல்லாமையெனும் வறுமையொழியும்
மனித சமுதாயத்தினிலே...
நாம் ஒவ்வொருவரும் இயற்கையை நேசித்தே,
பேணிக்காக்கும் போதினிலே,
இயற்கைப் பேரிடர் நிகழாது போகும் பூமி மீதினிலே...
பிள்ளைகள் பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பேற்கும் போதினிலே,
முதியோர் இல்லம் இல்லாது போகும் பாரினிலே....
ஆண், பெண் அவசரமில்லாது முறையான இல்லறம் அமைக்கும் போதினிலே,
அனாதைக்குழந்தைகளென்னும்
வார்த்தை அர்த்தமற்றதாகி, அவசியமற்றதாகும் ஞானிலத்தினிலே....