சுவாமி எதிரே நிற்காதீர்

கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று சிலர் வழிபடுவதுண்டு. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி என்கிறார் காஞ்சிப்பெரியவர். கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்று தான் வணங்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்கு தான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு. அபிராமியன்னையின் கடைக்கண்பார்வை நம் மீது பட்டால் கல்வி, செல்வவளம், ஒருநாளும் தளராத மனம், தெய்வீக வடிவம், வஞ்சமில்லாத நண்பர்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும் என அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார்.

*கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்*

* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது

* வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது

* சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது

* பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது

* கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது

* கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது

* கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது

* நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது

* தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும்

* ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது

* மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது

* கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது

* கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது

* பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்க கூடாது

* கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது

* ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது

* அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும்

* தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது

* கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது

* சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது

* கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை கழுவ வேண்டும்

* கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும்

* கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும்

* ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது.

* கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது.

* நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியனத்தையோ இடையுறு செய்ய கூடாது.

* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.

* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.

* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.

* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.

* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.

* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு முறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (17-Dec-16, 11:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே