வாழ்வில் மறக்க முடியாத நாள்

காலையில் எழுந்ததும்
கல்லூரி செல்ல வேண்டுமே என்ற சலிப்போடு பல் துலக்கி குளித்துவிட்டு,
ஆடைகள் அணிந்து அப்பா சமைத்த உணவை டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு பஸ் நிறுத்தம் வந்து,
கல்லூரி பஸ்ஸில் ஏறி,
கல்லூரி நோக்கியே பயணமானேன்..

கல்லூரி வந்த பின்பு காலை உணவு உண்ணாததால் எடுத்த பசியைத் தீர்க்க கையில் இருந்த 20 ரூபாயில் 18 ரூபாயிக்கு மூன்று இட்லியை வாங்கி விழுங்கினேன்..
கையில் மீதமிருந்தது இரண்டு ரூபாய் மட்டுமே...

தேர்வு எழுத சென்ற நண்பர்கள் திரும்பி வர காத்திருத்தேன்,
அன்பு தோழன் மகேந்திரனோடு..

மதிய நேரம் டிபன் பாக்ஸில் இருந்த உணவை பகிர்ந்து உண்டோம் நானும், மகேந்திரனும்...

மணி பிற்பகல் 12:15 இருக்கும்.
தோழன் மகேந்திரன் கிளம்புகிறேன் வீட்டிற்கென்றான்...

அவனை கல்லூரி நுழைவாயில் வரை சென்று வழியனுப்ப புறப்பட்ட நான்,
இன்னொரு நண்பன் மாரிக்கண்ணன் சிவாவைக் கண்டேன்..

அப்போது, வானம் தூறிக்கொண்டிருந்தது மழைத் தூறல்களை.

மாரிக்கண்ணனிடம், " நண்பா, மகேந்திரனைக் கல்லூரி ஹேட்டு வரை சென்று விட்டு விட்டு வரலாம். ", என்றேன்..
மறுமொழி கூறாமல் என்னுடன் புறப்பட்டான் அன்பு தோழன் மாரிக்கண்ணன்..

ஹேட்டுவரை மகேந்திரனைக் கொண்டு விட்டுவிட்டு திரும்பினோம்...
திரும்பி வந்து பார்த்தால் தேர்வு எழுதச் சென்றிருந்த கண்ணன் திரும்பி இருந்தான்..

கண்ணனிடம் சென்று பேசிக் கொண்டிருந்தேன்..
அன்று கல்லூரி வந்ததே வீட்டிலிருந்தால் தனிமை கொல்லுமென்றே..
கல்லூரி நண்பர்களிலேயே மாரிக்கண்ணன் மற்றும் கண்ணன் இருவரும் எனது நெருங்கிய தோழர்கள்..

கண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கையில்,
மாரிக்கண்ணன் வந்து கண்ணனை அவனது வீட்டிற்கு அழைத்தான்..
கண்ணன் சொன்னான், " சிவா வந்திருக்கான். நான் உன் கூட வந்திட்டால் இவன் என்ன செய்வான்?. ", என்று..
அதற்கு மாரிக்கண்ணன், " அவனையும் வரச்சொல். நீயும் வா சிவா. ", என்றான்..

நான் உடனே, " நான் உன் வீட்டிற்கு வந்தால், சாப்பாடு தருவியா? ", என்றேன் விளையாட்டாக...

அதற்கு மாரிக்கண்ணன் , " உனக்கு சாப்பாடு இல்லாமலையா கூப்பிடுவேன் மச்சி?? நீ வா. ", என்றான்..

நான், மாரிக்கண்ணன், கண்ணன், மற்றும் மாரிக்கண்ணன் வகுப்புத் தோழிகள் விஷ்ணு, சுவாதி ஆகியோர் கல்லூரி விட்டு வெளியே வந்து பஸ்ஸிற்காக காத்திருந்தோம்...

அடுத்த கால் மணிநேரத்தில் அடாது கூட்டத்தோடு ஆடி அசைந்து அரசாங்க பெரூந்து வந்து சேர்ந்தது..

முன் வாசலில் விஷ்ணுவும், சுவாதியும் ஏற, பின் நானும், மாரிக்கண்ணன் மற்றும் கண்ணனும் ஏறினோம்...

பெரூந்து நகர, இடைஞ்சலில் தொங்கிக் கொண்டே பயணமானோம்..
அடுத்தடுத்த நிறுத்தங்களில் பெரூந்து நிற்க, கூட்டம் குறைய,
நாங்க இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினோம்...

நண்பர்கள் நால்வரும் மாரிக்கண்ணனோடு அவன் வீடு நோக்கியே நடக்கலானோம்...

மழைச்சாரலில் அருமையான சூழலில் வீட்டை அடைந்தோம்..
சிமெண்ட் சாலையோரம் இருந்த ஒரு ஓட்டு விட்டின் கதவைத் திறந்து உள்ளே புத்தகப்பைகளை வைக்க சொன்னான் மாரிக்கண்ணன்...

உடனே விஷ்ணு விளையாட்டாக, " இது யாரு வீடு மாடு? பக்கத்து வீட்டில் நுழைய வைத்து, திட்டு வாங்க வைத்துவிடாதே, " என்றாள்.

" என் வீடுதான் லூசு. உள்ளே சென்று பேக்குகளை வைத்துவிட்டு வா. ", என்றான்..

பேக்குகளை வைத்துவிட்டு வெளியே வந்த எங்களை ஒரு இடுக்கல் வழியாக வீட்டின் பின் புறம் அழைத்துச் சென்றான்..
அங்கே ஒரு வீடு இருந்தது. அதனுள் சென்றதும் மாரிக்கண்ணன் வீட்டார் எங்களை வரவேற்றார்கள்...

மாரிக்கண்ணன் சிவாவின் அக்கா பையனை பார்த்துவிட்டு மீண்டும் முன்புற வீட்டிற்கு வந்தோம்..

மாரிக்கண்ணன் நாங்கள் நால்வரும் சாப்பிட இட்லி எடுத்து வந்தான்.
இட்லியைப் பரிமாறி சாம்பார் ஊற்றி சாப்டோம்..
சாப்பிடும் போது, கண்ணனும், விஷ்ணுயும், சுவாதியும் ஒருவரை ஒருவர் கல்லாய்த்து கொண்டே சாப்பிட்டார்கள்..
நான் அமைதியாக சிரித்துக் கொண்டே சாப்டேன்..

விஷ்ணு என்னைப் பார்த்து, " நம்ம வீடு தான் சிவா, கூச்சப்படாமல் சாப்பிடு. ", என்றாள்.
அதற்கும் நான் சிரித்துக் கொண்டே அமைதியாய் சாப்பிட்டேன்..
காரணம், நான் விஷ்ணு மற்றும் சுவாதியோடு நண்பனாக பழகியதில்லை என்பதாலேயே..

சாப்பிட்டு முடித்த சுவாதி மாரிக்கண்ணனின் அக்கா குழந்தையை வைத்துக் கொண்டிருத்தாள்..

இட்லி சாப்பிட்டு முடிந்ததும் சூடான தோசை கொண்டு வந்தான் மாரிக்கண்ணன் சிவா.
அதையும் சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தோம்.

பிறகு, மாரிக்கண்ணனின் வீட்டாரிடம் சென்று வருகிறோமென்று கூறிவிட்டு,
மாரிக்கண்ணனின் அண்ணன் வீட்டிற்கு சென்றோம்..

அங்கு செல்லும் போது,
தின்பதற்கு திண்பண்டங்கள் மற்றும் குடிப்பதற்கு கூல்டிரிங்ஸ் வாங்கி வந்தான் மாரிக்கண்ணன்..

மாரிக்கண்ணனின் அண்ணன் வீட்டை அடைந்தோம்.
அங்கு, மாரிக்கண்ணின் அண்ணன் இருந்தார்.
எங்களை இன்முகத்தோடு வரவேற்றார்.

நான் மாரிக்கண்ணனிடம் கழிப்பறை எங்குள்ளது என்று கேட்டு அங்கு சென்று விட்டு திரும்பி வந்தேன்.
அனைவரும் உட்கார்ந்திருந்தோம்..
மாரிக்கண்ணன் போட்டோஸ் காட்டினான்..

மாரிக்கண்ணனின் அண்ணனுடைய கல்யாண ஆல்பம் பார்த்தோம்..

வாங்கி வந்த தின்பண்டங்களைத் தின்று கொண்டே டிவி பார்த்தோம்.
மாரிக்கண்ணனின் அண்ணன் வெளியே கிளம்பிச் சென்றார்..

பிற்பகல் 3:15 மணிக்கு மாரிக்கண்ணன் டீ போட்டுக் கொடுத்தான்.
குடித்துவிட்டு, ஞாபகத்தமாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம்...
மாரிக்கண்ணன் தனது கைப்பேசியில் எடுத்தான்.
நான் எனது மனதில் வீடியோவாக பதிந்தேன்..

பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெரூந்து நிறுத்தம் வந்தோம்...

விஷ்ணு, மற்றும் சுவாதியை அவர்கள் ஊர்களுக்குச் செல்லும் பெரூந்தில் ஏற்றிவிட்டோம்..

நானும் கண்ணனும் மாரிக்கண்ணனிடம் நாங்கள் போய் கொள்கிறோமென்று சொன்னோம்..
மாரிக்கண்ணனும் சரியென்று வீட்டிற்குச் சென்றான்..

நானும், கண்ணனும் பெரூந்து நிலையம் நோக்கி நடந்தோம்..
கண்ணன் என்னிடம், " பெரூந்திற்கு காசு வைத்திருக்கிறாயா? ", என்றான்.

நான், " இல்லை மச்சி ", என்றதும் பத்து ரூபாயைக் கொடுத்தான்.

பெரூந்து நிலையம் வந்தோம்.
எங்களுக்கான பெருந்துகள் வந்தன.
ஏறி வீடு நோக்கி பயணமானோம்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Dec-16, 9:47 pm)
பார்வை : 1507

மேலே