என் இனிய நட்பு

சிந்தும் துளியாக நீ பிறந்தால், உன்னை
ஏந்தும் மண்ணாக நான் பிறப்பேன்...

சிாி க்கும் மலராக நீ மலர்ந்தால், உன்னை
தாங்கும் காம்பாக மாறி விடுவேன்...

வீசும் தென்றலாய் நீ வந்தால், உன்னை
கட்டி அணைக்கும் மலை நான் ஆவேன்...

சூரியன் போலவே நீ இருந்தால், உன்னை
சுற்றி வரும் பூமி நான் ஆவேன்...

பாடும் அலைகடல் நீ என்றால், நீ
தவழும் கரைகளும் நான் ஆவேன்...

வெள்ளி வெண்ணிலவு நீ என்றால், அந்த
பரந்த வானமே நான் ஆவேன்...

ஓடும் நதியாக நீ இருந்தால், நீ
சேரும் கடலாக நான் இருப்பேன்...

முத்தாக நீயும் பிறந்திருந்தால்,
சிப்பியாக உன்னை காத்து நிற்பேன்...

ஆனால் மனிதனாக நீ பிறந்ததனால், உன்
நண்பனாகவே நான் பிறந்தேன்...

நட்பு என்னும் ஒற்றை சொல்கொண்டு
பல ஜென்ம பந்தம் அதை நான் உணர்ந்தேன்...

கருவறை ஒன்று எனக்கு இல்லையே
என் மித்திரன் உன்னை சுமந்திடவே...

கல்லறை தாண்டியும் நான் வருவேன்
உன் சண்டை அதை என்றும் வேண்டிடுவேன்...


என்றும் அன்புடன்
உன் இனிய நட்பு...

எழுதியவர் : ரகுராம் ரத்தினம் (19-Dec-16, 9:40 pm)
சேர்த்தது : ரகுராம் ரத்தினம்
Tanglish : en iniya natpu
பார்வை : 955

மேலே