எசப்பாட்டு - 06 ஏண்டி நீயும் சோர்ந்துபோயி

எசப்பாட்டு - 06

ஏண்டி நீயும் சோர்ந்துபோயி
காலடியில் அமர்ந்துக்கிட்ட
உன் மனச நோகடிக்க நான்
என்ன சொல்லிப்புட்டேன் செல்லம்மா - நான்
என்ன சொல்லிப்புட்டேன் செல்லம்மா

(மனைவியிடமிருந்து பதிலில்லை)

கேட்டதுமே பதுல் தருவ
ஏண்டி பேசாதிருக்கே
உப்புமோரு போட்டுத்தாறேன்
குடுச்சுப்புட்டு பதிலச் சொல்லு
செல்லம்மா - நீ
குடுச்சுப்புட்டு பதிலச் சொல்லு
செல்லம்மா

மூலையிலே குந்திகிட்ட
மூக்கொ ழுகஅழுதுப் புட்டா
நெனச்சதெல்லாம் நடந்துடுமா
சொல்லேண்டி - நீ
நெனச்சதெல்லாம் நடந்துடுமா
சொல்லேண்டி

எரிச்சல் மூட்டிப் பாக்காதேள்
ஏற்கனவே ஒருத்தன் கையை
எரிச்சலால உடைச்சுப் புட்டேன் – நான்
எரிச்சலால உடைச்சுப் புட்டேன்

ஒன்னுமெனக்குப் வெளங்கல்ல
வெவரமா சொல்லு செல்லம்மா
உப்புமோரு வாங்கிக்கிக்கோ
குடுச்சுப்புட்டு மெல்லச் சொல்லு
செல்லம்மா - நீ
குடுச்சுப்புட்டு மெல்லச் சொல்லு
செல்லம்மா

(மனைவி மோருவாங்கி பருகியபின்)

பணமெடுக்க வங்கியிலே
போயிருந்த போதினில
கேட்ட பணத்தை கொடுக்காம
பாதியத் தான் தருவேன்னான்

(முந்தானையால் முகத்தைத் துடைத்துவிட்டு)

கைமாத்தா கேட்டேன் நான்
என்பணத்தைத் தான் கேட்டேன்
மறுத்தபோது எரிச்சல் பட்டு
கைய்யப் பிடுச்சுக் கடிச்சுப்புட்டேன்
அங்கு நடந்த அமளியிலே
வெலவெலத்து போயிருக்கேன்
மடிய கொஞ்சம் கொடுத்தேள்னா
தலையை கொஞ்சம் சாச்சிருப்பேன்

(கணவன் அவளருகில் அமர்ந்து)

கறுப்புப் பண வேட்டையிலே
மேலரசு இறங்கிருக்கு
அச்சே தின் வருவதற்கு
பத்தே தான் நாளிற்கு செல்லம்மா
இன்னும் பத்தே தான் நாளிற்கு செல்லம்மா

இத்தனை நாள் பொறுத்தாச்சு
இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து
பார்த்துடுவோம் - நாம
இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து
பார்த்துடுவோம்

(கணவன் மனைவியின் கூந்தலை வருடியவாறே)

நிலைமை சீரு ஆக்காட்டா
எரிமலையாய் குமுறிடுவோம்
செல்லம்மா - நாம
எரிமலையாய் குமுறிடுவோம்
செல்லம்மா

- தர்மராஜன் வெங்கடாச்சலம்

21-12-2016

எழுதியவர் : (21-Dec-16, 2:59 pm)
பார்வை : 60

மேலே