விதி செய்யும் மாயம்

ஆனந்தம் நிறைந்த வாழ்வில்
போராட்டமெனும் கொடுமை தொடங்க இழந்தோம் சுதந்திரத்தை
நடந்தோம் அந்தரத்தில்...!

குண்டு வீச்சுக்களோ
தொடராய் எம்மை துரத்த
ஆதரிக்க யாருமின்றி மர நிழலில்
அமர்ந்திருந்தோம் பாதுகாப்பு அரணெதுவுமின்றி....!

சத்தங்கள் அதிகரிக்க
மனதிலும் பயம் அதிகரித்தது
வாழ்வா சாவா எனத் தெரியாமல் தடுமாறிய பொழுது
வந்து விழுந்தது அதிர்வுடன் பெருங்குண்டு...!

இரத்தம் தெறித்தே
உடற்சதைகள் பறக்க
மூடிய கண்களை திறந்து
துடிதுடித்து போனோம் அநாதைகளாய்...!

பாலூட்டி சீராட்டி வளர்த்த அன்னை வியர்வை சிந்தி உழைத்து உணவூட்டிய தந்தை
உடல்கள் வேறு தலைகள் வேறாய்....!

கல்வி கற்கும் வயதில் தம்பியை
சுமந்தேன் மடியிலே
ஆயிரம் மக்கள் நடமாடும் வீதியில் ஒரு வேளை உணவிற்காய் தவிக்கிறோம் பசியால்....
விதி செய்யும் மாயமா இது...?

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (22-Dec-16, 3:54 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : vidhi seiyum maayam
பார்வை : 80

மேலே