முதிர்கன்னி
![](https://eluthu.com/images/loading.gif)
என் மன வானில்
சிறகை விரித்த வண்ணக் கனவுகள் யாவும்
சூரியனைக் கண்ட பனிப் போல் மறைகின்றன....
காரணங்கள் வேறுபடுகின்றன
வருடங்கள் ஓடுகின்றன
என் வயதும் ஏறுகின்றன
ஆனால்
கனவுகள் மட்டும் கற்பனை சிறகை விரித்து
எதிர் நோக்கும் அந்நாள் வருமோ என சிறகை விரித்து பறக்க
காத்துக் கொண்டே இருக்கின்றன.....