இந்திய விடுதலையில் தமிழ்நாடு

வணக்கம். நான் மோக்ஸ்சா. நான் இந்தியாவின் விடுதலையில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன். அந்நாளில் உலகின் வளம் கண்ட நாடுகளில் இந்தியா தலைசிறந்ததாக இருந்தது. இந்தியாவுடன் பிரிட்டிஷ் அரசாங்கம் சிறு சிறு வணிகத்தில் ஈடுபட்டது. பின்னர் அவர்கள் இந்திய நாட்டையே வளைத்து தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களின் அதிகாரம் மேலோங்கி இந்திய மக்களை வரிப்பணத்திற்காக வதைத்தினர். இந்திய மக்கள் எல்லா சுதந்திரத்தையும் இழந்தினர். அடிமைகள் போல நடத்தப்பட்டனர்.
உழவுக்கருவிகளும், கைத்தொழில் கருவிகளும் கையாண்ட இந்திய மக்கள், வெள்ளையர்களை எதிர்க்க சண்டைக்கருவிகளை கையில் எடுத்தனர். வெறுமனே வரவில்லை இந்திய சுதந்திரம். பல தலைவர்கள் தங்களுடைய வாழ்வினையே இதற்காக வழங்கினார். அவர்கள் பட்ட துன்பங்கள் பலப்பல. அவர்கள் சிந்திய இரத்தங்கள் நம்முடைய இந்திய திருநாட்டின் விடுதலையில் முடிந்தது.
இதன் முதல் விதை நம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையக்காரரிடம் வெளிப்பட்டது. இதில் முதன்மையானவர் புலித்தேவர் என்னும் பாளையக்காரர் ஆவார். (காலம் 1747).
இதன் பிறகு, தீரன் சின்னமலை மற்றும் மருது சகோதரர்கள் வெள்ளையர் உடன் சண்டை புரிந்தனர். (காலம் 1789 ).
தமிழகத்திலேயே வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீர பாண்டிய கட்டபொம்மன் ஆவார். அவர் வெள்ளையருக்கு வரி செலுத்த மறுத்து , அவர்களுக்கு அடிபணிய மறுத்தார். இதனால் அவர் பல ஆண்டுகள் வெள்ளையருடன் போராடினார். பின்னர் சில கயவர்களால் காட்டி கொடுக்கப்பட்டு இறுதியில் அவரை வெள்ளையர்கள் தூக்கிலிட்டுக் கொன்றனர். (காலம் 1799 ).
விடுதலைக்காக பால கங்காதர திலகரை பின்பற்றி, நமது முண்டாசு கவிஞர் சுப்ரமணிய பாரதியாரும், இந்தியாவில் முதன்முதலில் சுதேசி கப்பலை செலுத்திய வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணிய சிவா இம்மூவரும் பாடுபட்டனர். பாரதியார் தேசிய விடுதலைக்காக பாடல்களை இயற்றி பாடி, இந்திய மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டினார்.
வ.உ.சி என்ற செக்கிழுத்த செம்மல், தன் உடைமைகள் எல்லாம் தேச விAடுதலைக்காக செலவிட்டு, வெள்ளையUரால் அந்தமான் சிறையில் செக்கிழுத்து துன்பம் அனுபவித்தார். இவருடன் சேர்ந்து நம் விடுதலைக்காக போராடியவர் சுப்ரமணிய சிவா ஆவார். இவர் தன் பேச்சு திறனால் பல இளைஞர்களை இந்திய விடுதலைக்காக போராட வைத்தார். இதனால் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வ.உ.சி மற்றும் சுப்ரமணிய சிவா இருவரையும் சிறையில் அடைத்தது ஆஷ் துரை என்ற ஆளுநர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆவார்கள். இவரை மணியாச்சி இரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் வாஞ்சிநாதன் என்ற வாலிபர் ஆவார். அவர் பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை விட்டார். இதனால் அவர் வீர வாஞ்சி என அழைக்கப்பட்டார். (காலம் 1911 ).
திருப்பூர் குமரன் என அழைக்கப்படுபவர், தான் தலைமை தாங்கி சென்ற ஊர்வலத்தில் வெள்ளையர்கள் இவர்களை தாக்கினார்கள். இதில் அடிப்பட்ட குமரன், தான் இறக்கும் தருவாயிலும் தன் கையில் பிடித்த இந்திய தேசிய கோடியை கீழே விழாமல் காத்தார். இதனால் அவர் கோடி காத்த குமரன் ஆனார்.
பெண்களில், வேலு நாச்சியார், அழகம்மையார்,தில்லையாடி வள்ளியம்மை போன்றோர் இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை விட்டு போராடியவர்கள் ஆவார்கள்.

இத்தகையவர்களின் போராட்டங்களினாலும், மகாத்மா காந்தி அவர்களின் தலைமையின் கீழ் அஹிம்சை வழி போராட்டினாலும் இந்திய 15 .ஆகஸ்ட் 1947 அன்று சுதந்திரம் அடைந்தது. இந்திய பெற்ற சுதந்திரத்தை இந்தியர்கள் போற்றி பாதுகாக்கவேண்டும்.

வாழ்க இந்தியா! வளர்க்க இந்தியா !!

ந. தெய்வசிகாமணி

எழுதியவர் : ந. தெய்வசிகாமணி (26-Dec-16, 11:22 pm)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
பார்வை : 787

மேலே