இனிய புத்தாண்டு
நடு நிசி வரை விழித்திருந்து காத்திருந்ததும் உண்டு
நண்பர்கள் புடை சூழ களித்திருந்ததும் உண்டு
குடும்பதினருக்கெல்லாம் விழித்திருந்து வாழ்த்தியதும் உண்டு
இதுவும் ஒரு சாதா நாள்தான் என உறங்கியதும் உண்டு
வெடி ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தவும் உண்டு
வருடங்களைப் பிரிக்கும் கோட்டை தாண்டும் விழாவை ஒரு
வெறிகொண்டு தாண்டும் விளையாட்டு வீரர் போலன்று
சிரித்தே விளையாட்டில் தாண்டும் சின்னக் குழந்தைகள் போல்
சிறப்பொன்றும் இல்லை என சீக்கிரம் உணர்ந்திடுவோம்
மணித்துளிகள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் அதுவாய்
மனதுக்குள் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தி விடாது
மனிதர்கள் அவர்தம் மனம், செயல் செம்மையாகிடினே
மானுடம் தானாய் மகிழ்வுற்றுச் சிறப்புறும்..
கசப்பைத் தவிர்ப்போம்
இனிப்பைக் கூட்டுவோம்
நல்லவை நடக்க போற்றுவோம்
அல்லவை குறைக்க பாடுபடுவோம்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!
அன்புடன் முரளி