உன்னோடு வாழத்தானே

உன்னோடு
வாழத்தானே
என்னோடு
உசிரு இருக்கு.....
நீ
இன்றிப்போனால்
இங்கே
வாழ்வதாய்
நினைவில்லை
எனக்கு.....!!

நெற்றியிலே
பொட்டுவைச்ச
நினைவுமட்டும்
விட்டுவைக்கவில்லை
என்னை.....
உன்னையும் தான்.....
சந்தோஷ
வானில்
சிறகடித்தோம்.....
ஏனோ
நம்மை நாமே
சாகடித்தோம்......!!!

புரியாத
வாழ்க்கையை
பிரியாத
நினைவுகளைக்
கொண்டு.....
புன்னகைத்து
வாழ்வது
அவ்வளவு
சுலபமில்லையே......!?

சேர்ந்திடுவாய்
என்றே
சென்ற இடமெல்லாம்
சென்றமர்ந்தேன்.....
வந்தமர்வாய்
என்றெண்ணி.....!
காலமெல்லாம்
காதல் வாழும்.....
காதலே..... காதலியே
கண்ணீருக்கு மட்டும்
சொந்தக்காரியா
நீ.....????

பூவுக்குள்
புயலடித்த
பொழுது.....
தொலைந்தது
பூவாசம்.....
நமக்குள்
புயலடித்து
தொலைந்தது
நம்
நேசமும்
சுவாசமும்
தானே.....!?!?

வருவாய்
வருவாய்
என்றே
வருஷங்கள்
தொடங்கி
முடியும்
வரை....வாசல்
பார்க்கும்
என்விழிப்
பார்வைகள்......!!

எழுதியவர் : thampu (1-Jan-17, 3:40 pm)
Tanglish : unnodu vaazhathaane
பார்வை : 690

மேலே