யாரிடம் தூது சொல்வது

நட்சத்திரங்களை தூது அனுப்பினேன் ..
உனைக்கண்டு திகைத்துவிட்டன போலிருக்கு திரும்பவில்லை ..

ஒற்றனாய் வந்த
வான் வில்லும் வளைந்ததடி !
நின் இமைகள் கண்ட
மயக்கத்தினாலோ?

பாவை அவள் கன்னம்
கண்ட மேகங்களும்
நாணம் கொண்டு ஓடினவே..

உடன் வந்த தென்றலும்
திரும்பவில்லை..
அவள் கூந்தல் உரசியதில்
சிதைந்துபோனதோ என்னவோ?

அவைகள் திரும்பத்தவே,
சேனை வீரனை அனுப்பினேன் ..
உந்தன் புன்னகையோடு
போர் தொடுக்க முடியாமல்
ஓடிவிட்டான் போலும்..
உயிர் பிழைக்க
அசைபட்டனோ என்னவோ?

நானே வந்திருப்பேன்
உனது விழிகள் எனை
உருக்குலைத்து விடுமோ
என பயந்தேன்..

யாரிடம் தூது சொல்ல,
உன்னிடம் சிறைக் கொண்டிருக்கும் என் மனதை மீட்டுத்தருமாறு?

ரதியே!
சிறைப்பிடித்த என் மனதை
உந்தன் இதழ்களிடம்
இரவலாக அனுப்பிவிடுவாயாக
நன் உயிர் பிழைக்க ..!

எழுதியவர் : செ.ஞானப்பிரகாசம். (1-Jan-17, 1:58 pm)
பார்வை : 492

மேலே