கொஞ்சும் கிளி
பொன்மேனி கிளிஒன்று
என் விழியோடு கதை.பேசுதே
என் மேனியில் தொட கொஞ்சுதே
பொத்திவைச்ச காதலை தான் பூ போல கீதம் பாடுது
ஒரு துளி தேன் கொண்டு இதழோடு இதழ் கொஞ்சுது
நான் போகும் பாதையில் நிழலாக தொடர்கிறதே
அலகாலே தூரிகையிட்டு என் நெஞ்சினில்வரைகிறதே
காதல் ஒவியமோ சிரிக்கிறதே
விழியோடு விழி பேசி உறவாட துடிக்கிறதே
பொன் வான மேகங்கள் பூ மழை பொழிகையில்
என் வான மேகங்கள் தேன் மழை சிந்துதே
அழைக்கின்ற கனவுகள் நெஞ்சினில் விளையாட
கிளி கொஞ்சும் பார்வையில்
வானமே எல்லை தான்

