படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
முன்பயிற்சி
வருங்கால ஜல்லிக்கட்டு
வீரர்கள் !
தண்ணீர் காட்டும்
சிறுவர்களுக்கு
தண்ணீர் காட்டும் கன்று !
பாரதியின் பாடல்படி
ஓடி விளையாடும்
சிறுவர்கள் !
இளங்கன்று பயமறியாது
மெய்ப்பிக்கும்
சிறுவர்கள் !
தரையில் இல்லை
கால்கள்
பறக்கும் கன்று !