நட்பு
காதல்
கசிந்த வேளையிலும்
கசந்த வேளையிலும்
மனம்
சிரித்த வேளையிலும்
சிதறிய வேளையிலும்
பணம்
இருந்த வேளையிலும்
இழந்த வேளையிலும்
சுற்றம்
ஒன்றிய வேளையிலும்
உதறிய வேளையிலும்
உறவுகள்
புகழ்ந்த வேளையிலும்
இகழ்ந்த வேளையிலும்
உச்சங்களை
பகிர்ந்து கொள்ளும்
உன்னத ஊடகம்
நட்பின்றி வேறெது!!
வாழ்க்கைக் கடலின்
அக்கரைக்கு
அக்கறையோடு
அழைத்துச் செல்லும்
நட்பென்னும் நாவாயில்
பயணிப்போம்.....