உழவனின் குறல்

கண்ணீர் துளிகள் அழுகிறது
தான் அருவியாய்
கொட்டி யாருடைய
தாகத்தை தீர்க்கமுடியும்
என்று...

மொழிகள் புழம்புகிறது
யாருடன் எனது தேவைகளை
முறையிடுவதென்று...

மனமோ அலைபாய்கிறது
மன்னோடு புதைவதை
தவிர வேரு வழிகளே
இல்லையென்று....

வாசிக்கத் தெரியாது
எழுதவும் தெரியாது
ஆனால்
எங்களால்
உங்களுக்கு
உணவளிக்க முடியும்....

பல உயிர்களைக் காக்கும்
ஒரே உயிர் பூமி
அதன் தாகம்
தீர்க்காவிடில் உயிர்
துறந்து நம்மையும்
அழைத்துச்
சென்றிடும்...

எங்கோ ஒருவன்
நீச்சல் குளத்தில்
இங்கு
கண்ணீர்
மூழ்கி
மன்னின்
அடியில்....

தீர்வு இளைஞர்களின்
கையில்....
.....

......
.....

எழுதியவர் : ரா. சுரேஷ் (4-Jan-17, 10:42 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 105

மேலே