இரவின் மடியில்
#இரவின் மடியில்
கண்விழித்துக் கொள்கிறது
நிலவும் நட்சத்திரங்களும்..!
வெப்பத்திடமிருந்து
விடுதலையான மகிழ்ச்சியில்
காற்றின் குளிர்ச்சி உலா..!
நான்கு சுவருக்குள்
உலகெங்கிலும்
மனித உற்பத்திக்கான
சாகசங்கள்..!
குற்றங்களெல்லாம்
கும்மாளமிடுகிறது..!
இன்னும்
என்னவெல்லாமோ..!
-சொ. சாந்தி-
(நிலா சோறு குழுமத்திற்காக இருபது சொற்களில் எழுதியது. தலைப்பினை அளித்த குழுமத்திற்கு என் நன்றிகள்)