அம்மா

அன்பின் உருவம் நீ
அன்னையே...
அன்பின் உருவத்திற்கு
இக்கவிதை சமர்ப்பணம்.

ஆகாயம் நீ
அன்னையே...
என்றும் உன் பாதுகாப்பில்
நான்.

தவறான பாதையில்
நான் செல்லும்போது
தவறாமல் வந்து
என்னை நீ தடுத்தாய்!
ஏனென்றால், நீ என்
தாய்!

தாயே!
புரிந்துகொண்டேன்,
புரிந்துகொண்டேன்,
நீ என்னை கடந்துகொண்டது
என் நன்மைக்கே என்று.

என் ஆனந்தத்தை கண்டு
நீ மகிழ்ந்தாய்!!
என் அழுகையை கண்டு
நீ செயலிழந்து போனாய்.

அம்மா! நீ அதிகாலை
எழுந்து அமுதுபடைத்தாய்!
அதை நான் வெறுத்தபோதும்
நீ அமைதி காத்தாய்!

தாயே!
உணர்ந்துவிட்டேன்,
உணர்ந்துவிட்டேன்,
உன் உணவைப்போல்
சுவையானதில்லை என்று.

நான் படிக்கும் வரை
நீ கண் விழித்தாய்!
என் கண் தூக்கத்தை
தேடும் போது
உன் கைகள் கம்பினை
தேடவில்லை,
எனக்கு வலிமை கொடுக்க
பாலையல்லவா
தேடியது!!!

அன்னையே!!
சிறு வயதில்
என் அசைவுகள்,
முக்கல்,முனங்களிலே
என் தேவையை அறிந்து
பூர்த்தி செய்தாய்.

L.K.G., U.K.G.,க்கு முன்
பால்வாடி அதற்கு முன்னே
நான் கல்வி கற்றது
உன் மடியே....

அன்பாக நீ இருந்து
அறிவை ஊட்டினாய்!
அன்னையே!
கண்டிப்பாக நான்
உன்னுடன் இருந்து உனக்கு
பெருமை ஊட்டுவேன்.

பெண்மையில் தாய்மை!!
இஃது,
இறைவனின் அருமை!!!

எழுதியவர் : வே.ஸ்ரீ லோகநாதன் (8-Jan-17, 10:37 pm)
சேர்த்தது : ஸ்ரீ லோகநாதன்
Tanglish : amma
பார்வை : 2904

மேலே