சாப வரங்கள்

வலிக்கும் என்று தெரிந்த பின்பும்
வீசப்படும் வார்த்தைகள்
வதைக்கும் என்று தெரிந்த பின்பும்
நிராகரிப்படும் கனங்கள்
புரிந்து கொள்ளக்ககூடிய வார்த்தைகளை கூட
மிக சரியாக தவறாக புரிந்து கொள்வது
பிரிவு நேரிடும் தெரிந்த பின்பும்
பிரியம் காட்டாமல் இருப்பது
தெகட்ட தெகட்ட வெறுப்பது
நாம் பிறக்கும் பொழுதே
வழங்கப்பட்ட சாப வரங்கள்

எழுதியவர் : பிருந்தா நித்யானந்த் (9-Jan-17, 11:06 am)
Tanglish : saaba varangal
பார்வை : 108

மேலே