காதல் பழக வா-7

காதல் பழக வா-7

காதல் பழக வா-7

எத்தனை பேர் வந்தாலும்
எதை செய்தாவது
உன்னை என்னோடு
என்னவளாய் வைத்து கொள்வேன்
என் காதலியே.....
அதனால் நீ என்னை கள்வன் என்று
நினைத்து கொள்ளாதே
என் மனதை களவாடிய உன்னாலே
கள்வனாகி நிற்கும் உன்
காதல் மணவாளன் நான் ....
முதன்முறையாக பத்து ஜோடிகளின் திருமணத்தை ஒரே இடத்தில பார்ப்பதில் ஆர்வமாகி போன ராதி எதற்காக வந்தோம், என்ன செய்கிறோம் என எதையும் யோசிக்காமல் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, "அர்ச்சதை எடுத்துக்கோங்க" என்ற அய்யரின் குரலில் அர்ச்சதை வாங்க நகர ஒரு குட்டிப்பெண் நடுவில் ஓட தனக்கு எதிரே நிற்பவரை இடித்துவிட்டு தடுமாறிக்கொண்டே காலை ஊன்றி நின்றாள்....

யாரையோ இடித்துவிட்டோமே என நினைவு வர எதிர்புறம் இருந்தவனை பார்த்தால் ஆறடி உயரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் ஆண்மை பொலிவோடு தன்னையே விழுங்குவதை போல பார்த்துக்கொண்டிருப்பவனை பார்க்க பார்க்க இவன் தான் ஆண்மைக்கே இலக்கணமோ என்று நினைக்க கூட தோன்றியது....அவனின் பார்வையில் கன்னம் சிவந்து தலையை தாழ்த்திக்கொண்டு ராதி நிற்க "மாங்கல்ய தானம் பண்ணுங்க, மாப்பிள்ளைகள் பொண்ணுங்க கழுத்துல தாலிய கட்டுங்கோ" என்ற குரலில் எதோ ஒரு உணர்வு தூண்ட அவனை நிமிர்ந்து பார்த்த அந்த நொடி ராதியின் கழுத்தில் மாங்கல்யத்தை முடித்துவிட்டு இனி நீ என்னவள், எனக்கானவள் என்னும் உறுதி படிந்த பார்வையை பார்த்தான் கண்ணன்.....
அங்கு திருமணம் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருந்ததால் ராதியையோ, கண்ணனையே யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை, பதினோராவது ஜோடி என நினைத்துக்கொண்டு அவர்களுக்கும் சேர்த்து அர்ச்சதை தூவியபடி வாழ்த்து தெரிவித்தனர்......"நூறு வருஷம் கணவன் மனைவியா ஷேமமா இருக்கணும்" என்ற வாழ்த்து இருவரையும் நிகழ் உலகத்துக்கு கொண்டு வர கண்ணன் ராதியின் கரத்தை பற்றிக்கொண்டு தன் தாயை நோக்கி நடக்க ஆரம்பித்தான்....

என் பையனுக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கணும், அவன் குடும்பம் குழந்தைகள்னு சந்தோஷமா வாழனும், அதுக்கு நீ தான் அருள்புரியணும்னு கண்ணனின் அம்மா வேண்டுதல்களோடு சன்னிதானத்தில் அமர்ந்திருக்க ஒரே நிமிடத்தில் ராதியை தன் மனைவியாக்கிக்கொண்ட கண்ணனோ ராதியை ராமாம்மாவின் மருமகளாய் ஆக்கும் நோக்கத்தோடு தன் தாயின் முன் நின்றான்.....

காலையில் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தோடு நின்ற மகன் இப்போது மாப்பிள்ளையாகவே நிற்பதை கண்டு அதிர்ச்சியில் பேச்சற்று நின்ற தாயின் கால்களில் ஆசிர்வாதம் வாங்க கண்ணன் குனிய அவன் கை ராதியையும் இழுக்க ராதியும் ஒன்றும் புரியாமல் ரமாவின் காலில் விழுந்து எழுந்தாள்.....

"அம்மா இவ தான் என் மனைவி, உங்க மருமகள்"

மகன் சொன்னபடி தாலியை கட்டி இவள் தான் உங்க மருமகள் என்று கையோடு கூட்டி கொண்டு வந்ததில் ராமாவிற்கு தலையே சுற்றியது...

ராதிக்கோ உலகமே தட்டாமாலையாய் சுற்றி சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தாள்......
கண்ணனோ எந்த சலனமும் இல்லாமல் ராதியை கையில் ஏந்தியபடி "அம்மா வீட்டுக்கு போகலாம் வாங்க" என்று கூறிவிட்டு காரை நோக்கி நடந்தான்...
இத்தனை நேரமாகியும் ராதியை காணலையே என்று எல்லாரும் கவலைப்பட போனும் கையுமாக வந்த தினேஷோ ராதி இன்னும் வந்து சேரவில்லை என்ற தகவலில் போன் பேசிக்கொண்டே அவளை மறந்துவிட்டு வந்துவிட்டோமோ என்பதை அப்பொழுது தான் உணர்ந்தான்....

"ராதி அங்க கல்யாணம் நடக்கற இடத்துல தான் நின்னுட்டு இருந்தா, நான் கூட்டிட்டு வந்துடறேன், கவலைப்படாதீங்க" என்று ஆறுதல் கூறிவிட்டு ராதியை தேடிக்கொண்டு வந்தவன் கண்ணில் கண்ணன் ராதியின் கழுத்தில் தாலி காட்டியது துல்லியமாக தென்பட்டுவிட்டது.....

ராதியை தேடிக்கொண்டே தன் பின்னால் வந்த மொத்த குடும்பத்திடமும் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனாலும் ராதியின் அப்பா சுதாரித்து கொண்டு ராதியை தேட எவனோ ஒருவன் ராதியை தூக்கிக்கொண்டு காரில் ஏறியது கண்டு பின்தொடர்ந்தார்.....

ராமநாதன் போவதற்குள் கார் அங்கிருந்து கிளம்பிவிட என்ன செய்வது என்று புரியா நிலையில் மாப்பிள்ளை குடும்பத்திடம் வந்தவர் அதற்குமேல் நிறைய சமாளிக்க வேண்டியது இருந்தது....

"எங்களை கூப்பிட்டு அசிங்கப்படுத்தணும்னு தான் இத்தனை ஆர்வமாய் வர சொன்னிங்கலா, உங்க பொண்ணுக்கு வேற ஒரு பையனோட கல்யாணம் பண்றதாய் இருந்தா இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே, எதுக்காக குடும்பமா எங்களை கூட்டிட்டு வந்து எங்க முகத்துல கறியை பூசணும்"

"அப்டிலாம் இல்லைங்கம்மா, எங்களுக்கே ஒன்னும் புரியல, கொஞ்சம் பொறுமையா இருங்க என்ன, எதுன்னு விசாரிப்போம்"

"விசாரிச்சு ரெண்டாம் தாரமாய் என் பையனை உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்றிங்களா, உங்க விசாரணையும் போதும், உபசரிப்பும் போதும்....இப்படி ஒரு கேவலமான குடும்பம்னு முன்னமே தெரிஞ்சிருந்தா இங்க வந்திருக்கவே மாட்டோம், வாடி போகலாம், என்னமா பாத்துட்டு நிக்கறீங்க இதுக்குமேல இங்க நின்னு அசிங்கப்படணுமா, எல்லாரும் முதல்ல இங்கிருந்து போகலாம் வாங்க"

நடந்த அதிர்ச்சியில் சிலையாய் நின்றுகொண்டிருந்த மனைவியை எப்படி தேற்றுவது என புரியாமல் கதிகலங்கி போனார் ராமநாதன்.....

அங்கு நடந்த கலவரத்தில் அங்குமிங்குமாக சிலர் நின்றுகொண்டிருக்க,வேகவேகமாக வந்த பூசாரி நிலைமை புரியாமல் அங்கிருந்த ஒருவரிடம் தன் போக்கில் விசாரிக்க ஆரம்பித்தார்....

"கண்ணன் தம்பியும் அவங்க அம்மாவும் கிளம்பிட்டாங்களா, சாமி பிரசாதத்தை வங்கிக்காமலே போய்ட்டாங்களே, கண்ணன் தம்பிக்கு கல்யாண பிராப்தம் கிடைக்கணும்னு வந்த இடத்துல கல்யாணமே நடந்ததுல ரமா அம்மாக்கு சந்தோசம் நிலைகொள்ளாம போயிருக்கும், அதான் உடனே கிளம்பிட்டாங்க போல, ஏய் ராமு இந்த பிரசாதத்தை எடுத்து வை, இன்னைக்கு சாயங்காலம் அம்மாவோட பிறந்த நாள் விழாவுக்கு போகும்போது மறக்காம குடுக்கணும்"

இத்தனை விஷயத்தையும் ஓன்று விடாமல் மனதில் பதிய வைத்துக்கொண்ட ராதியின் அம்மா வினோ சத்தம் போடாமல் சாதுர்யமாக பூசாரியிடம் பேசி கண்ணன் வீட்டின் முகவரியை வாங்கிக்கொண்டு உட்சபட்ச கோவத்தோடு அங்கிருந்து ராமநாதனை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்....
கலவரத்தின் உட்சபட்ச கட்டத்தில் தான் ராதியும், கண்ணனும் தங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டுமென்பது இதுவரை இருவருமே கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்....


Close (X)

5 (5)
  

மேலே