அன்பு
பல நேரங்களில்
பந்தாட பட்டு இருக்கிறேன் ...
சில நேரங்களில்
அணைக்க பட்டு இருக்கிறேன் ....
அன்பின் அளவுகோல்
எனக்கு விளங்கவில்லை ..
நாவும் ஆயுதம் என்பது
நரர் மொழிக்கு தீதோ.....
பின் நின்று புறம் கூறாமை
பொன் என்று நினைத்தேன்
என் எண்ணம் ஏதுவாயின்
கண் முன் உரைத்தேன் ...
நன்று அல்ல என்கிறது குரல்கள்
நன்று எது என்பதில் தடுமாற்றம்
நின்று கொள்ளும் துரோகம்தான்
நன்றோ ... நரர் பூமியில் .....
அன்பு என கரை கொண்டால்
அன்பில் சுயநலம் தொலைதல் வேண்டும்
அன்பில் தொலையா சுயநலம்
அன்பு என்றால் அது பொய்மையே .....
பூஜ்யத்துக்குள் ராஜ்யம் என்றால்
ராஜ்யமே பூஜ்யம்தான் ..
பூஜ்யம் உடைத்து ராஜ்யம் என்றால்
ராஜ்யம் நா பேசும் நாடே ....
ஒன்றில் நின்றால் அன்பு தீதே..
நன்று என எங்கும் நின்றால் அன்பு
என்றும் வாழும் நிலவே ..
ஒன்றை தொலைத்து எங்கும் ஆகுக ,,,
நானிலம் பூங்காவனமாகும்
மாநிலம் ரோஜாவனமாகும்
அன்பு அகிலம் காணும்
அன்பு அகிலத்தை தரும் ....
இன்பா

