அம்மா
கொஞ்சி பேசலாம்
கொஞ்சம் பேசலாம்
கொஞ்சம் பேசலாம்
கொஞ்சி பேசலாம்
நகம் கடிக்கும்
நொடி பொழுதில்
விழியில்
மௌன மொழி
பேசும்
தாய்மை ஒரு
காதலே .....
கோபபட்டாலும்
பேச கூடாது என
தாபம் கொண்டாலும்
ஓர் அசைவில்
உணரும்
தாய்மைக்கு
ஈடு எது ....
சிந்திக்கிறேன்
சீண்டலில்
சுகம் கண்ட
அந்த உணர்வை ...
முறைப்பதும்
பொய் கோபம்
கொள்வதும்
காதலுக்கு
மட்டும் அல்ல
தாய்மைக்கும் தான்...
எப்போதும் வரும்
என் வண்டியின்
ஓசை கேட்டாள்
வாசல் வரும்
தாய்மை
இன்று இல்லை ...
வீட்டின் முன்
நின்ற கொய்யா
முறைத்து
பார்த்திட
சின்ன சின்ன
பொய்க்கள்
சில்மிஷ தனங்கள்
எனக்கு எதிராய் ...
அழகான செடிகள்
அம்மாவின்
லஞ்சத்தில்
விறைப்பாய்
பார்க்க ....
பின் புறம்
அடுப்பில்
கொதித்து
கொண்டிருந்த
மீன் குழம்பு வாசனை
நுகரும் தமணிகளை
தூண்டியது ...
நாலு மிளகாய்
சின்னதாய் சில
துண்டு மீன்கள்
அம்மாவின்
கை பக்குவம்
அய்யரையும்
அடிமையாக்கும் ...
நீண்ட நேரம்
காத்திருப்பு
கொஞ்சம்
பெரு மூச்சு ...
கொஞ்சம்
விசும்பல் ...
அம்மா வந்தால்
பழைய முகம் இல்லை
வா என்ற
அழைப்பு இல்லை ...
சுவரில் இருந்த
பல்லி என்னை
கேலி செய்தது ..
அதற்கு உள்ள
உரிமை எனக்கு
இல்லையாம் ....
வண்டி நின்ற
நிலையிலே
நானும் நின்றேன் ...
கால் சலித்தேன்
கை சலித்தேன்
மேனி சலித்தேன்
மனதும் சலித்தேன் ..
எப்போதும் தவறுக்காய்
நிற்பேன் ...
இப்போது
தவறு இன்றி
நிற்கிறேன் ...