எழுத்துகள் - மரபு கவிதை

எழுத்துகளும் சொல்லிடுமே
------ எண்ணற்ற இலக்கணத்தை
விழுதுகளாம் எழுத்துகளும்
------ விடைதருமே நமக்கெல்லாம்


எழுதுகின்ற செங்கோலாம்
------- எழுத்தாணித் தமிழ்மொழிக்கே
அழகுதரும் ழ'கரமன்றோ
------- அணிசேர்க்கும் என்றிசையும் .


கல்வியினை கற்றவர்கள்
------- காசினியில் உயர்ந்திடவும்
பல்கியுமே பெருக்கிடுவர்
-------- பழமையான எழுத்துகளை .


கல்லாதார் கற்றிடுவர்
------- கண்ணானத் தமிழ்மொழியை
நில்லாமல் ஓடிடுமே
-------- நிற்காதே வேற்றுமொழி .


செந்தமிழைக் கற்பிப்போம்
------- சேவைசெய்வோம் நாமென்றும்
பைந்தமிழில் பாடிடுவோம்
------- பசுமைகீதம் நற்சொல்லால்.


வந்துமுன்னே நின்றிடுமே
------- வகையான தமிழ்மொழியும்
எந்நாளும் எழுத்துகளும்
-------- என்றென்றும் எழிலன்றோ!!!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Jan-17, 4:28 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 52

மேலே