இறைவா நீ மட்டும் போதுமே
இறைவா நீ மட்டும் போதுமே.......
சஞ்சலம் எனும்போது உன் துணையொன்றே போதுமே.
துன்பம் எனை தகிக்கையில் உன் கரமொன்றே போதுமே
கடினம் எனை நகைக்கையில் உன் பார்வையொன்றே போதுமே
வேதனை எனை வாட்டுகையில் உன் நினைவொன்றே போதுமே
தடுமாற்றம் எனை சூழ்கையில் உன் அருளொன்றே போதுமே
சோதனை எனை தோற்கடிக்கையில் உன் கனிவொன்றே போதுமே
வெட்கம் எனை கொல்கையில் உன் நட்பொன்றே போதுமே
ஏமாற்றம் எனை ஆள்கையில் உன் உறவொன்றே போதுமே
பகை எனை பதம் பார்க்கையில் உன் கடைக்கண் பார்வை போதுமே
பொறாமை எனை தின்கையில் உன் நேசம் எனக்கு போதுமே
ஏமாற்றம் எனை தடுமாறச் செய்கையில் உன் அன்பொன்றே போதுமே...
இறைவா நீ மட்டும் போதுமே.......