உழவின் உறவாய்
காலம் மாறலாம்
கலாச்சாரம் மாறக்கூடாது
கழனி காய்கிறது
உழவு அழிகிறது
உயிர் பிரிகிறது
ஏன் இந்த வீழ்ச்சி
எத்தனை சூழ்ச்சி
ஜல்லிக்கட்டுக்கு எதற்கு சட்டம்
ஜனங்கள் வளமாய் வாழ தேவை திட்டம்
குளம் வற்றிப்போச்சி
குடிதண்ணீர் காசா ஆச்சி
விலைவாசி ஏறிப்போச்சி
விவசாயம் மெலிஞ்சிபோச்சி
விளைநிலம் பிளாட்டா ஆச்சி
இப்போ உழவன் தமிழன்
கலாச்சாரம் கூட கையவிட்டு போச்சி
உள்ளுணர்வோடு உணர்ந்துபார்
பயிர்களை நம்பி உயிர் வாழும்
உழவர்கள் நம் உண்ணும் உணவுக்காக
வியர்வை சிந்தி விதைக்கும்
உழவர்கள் நம் உறவுகள்
நம் உணர்வையும் உறவையும் இழந்துவிட்டால்
உழவுகள் அழியும்
உணவுகள் அழியும்
உயிர்கள் அழியும்
பல இனங்களும் அழியும்
தமிழன் கலைகளை காப்பவன்
தமிழன் காளைகளை வளப்பவன்
தமிழன் ஒத்துமையா வாழ்பவன்
தமிழன் உரிமையை மதிப்பவன்
உணர்வுகள் தொடரட்டும்
உழவுகள் செழிக்கட்டும்