மெரினா கடற்கறை

விண்ணின் மழைநீர் விழுந்து
தாய்மை அடைந்த நான் இன்று
தூய்மை அடைந்தேன்!

என்னிடத்தில் இதனை கண்டதால்,

சதியாக என் மக்களை வாட்டிய சாதி
சத்தியமாக ஒழிந்தது! இன்று
என் முன்னிலையில்!,

மிருகமாக இருந்த மதம்
இன்று
என் மக்களை விட்டு
மாயமாக மறைந்தது!!
என்முன்னிலையில்,

சத்தமிட்டு வரும் என் சீற்றமும்
இன்று அமைதியானது
என்முன்னிலையில் அமர்ந்த
என் சகோதர்களைக் கண்டு,

தொடர்ந்து வரும் அலைகளும்
இன்று அமைதியானது
என் முன்னிலையில் அமர்ந்த
என் தோழிகளைக் கண்டு,

பூமியை புரட்டி போடும்
புயல் காற்றும் இன்று
பூங்காற்றாக மாறியது!
என் மக்களின் போராட்ட குரல்
முன்பு,

கடல் நீராக ஒன்று சேர்ந்த நான்
இன்று கானல் நீராக மாறினேன்!
"ஒன்று பட்ட மக்களின்
ஒற்றுமையைக் கண்டு,

உருவம் கொண்ட உயிராக
ஒருவேளை
நான் இருந்து இருந்தால் இன்று
நானும் போராடி இருப்பேன்!
என் உறவுகளின் உரிமைக்காக......
.......................................................


இப்படிக்கு
மெரினா கடற்கறை

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Jan-17, 5:05 pm)
பார்வை : 335

மேலே