இளையோர் கடமை - தரவு கொச்சகக் கலிப்பா
நற்றமிழர் கடமைதனை நலங்கெடாது சிறப்பித்தே
உற்றவர்கள் சபைதனிலே உறுதியாகப் பதிந்துவிட்டீர்.
சற்றுமினித் தயக்கமில்லை சமுதாயம் பதில்சொல்ல
ஒற்றுமையே அகலாமல் உருவெடுத்தீர் இளைஞர்காள் !!!
இதனால்
ஒற்றுமை யுணர்வை ஓர்ந்திடும் செயலாம்
மற்றைய வழியை மாற்ற
வெற்றியும் நமக்கே ! வேதனை யிலையே !!!