வாழ்க்கை
திசை மாறாதே என் தோழா...
தீமையை நாடாதே என் தோழா...
அகந்தை அழிப்பாயே என் தோழா...
அன்போடு கருணை கொள்வாயே என் தோழா...
தூய சிந்தனையால் அமைதியடைவாயே என் தோழா...
பசியென வருவோர்க்கு புசியென உணவளிப்பாயே என் தோழா...
உன்னை சுற்றியொரு பூங்காவனம் அமைப்பாயே என் தோழா....
நாளும் மனிதநேயத்தோடு, உனது கடமையாற்றி வாழ்வாயே என் தோழா....