ஜல்லிக் கட்டு- பின்னே திரும்பிய பன்னீர் செல்வம்
பின்னே திரும்பிய பன்னீர் செல்வம்
ஜல்லிக் கட்டுப் போட்டியைக் காக்க
அள்ளித் தெளித்த கோலம் போல
அவசரச் சட்டம் அரசு போட்டதில்
தவறுகள் பலவும் இருக்குது என்று
அணங்கா நல்லூர் மக்கள் அதற்கு
இனங்கா திருந்து எதிர்த்த தனாலே
மதுரை சென்ற முதல் அமைச்சரும்
முதுகைக் காட்டி திரும்ப லாச்சுதே!