வெற்றி நமதே
வெற்றிநமதே செந்தமிழா !
வேண்டியதைச் சாதிப்பாய் !
ஒற்றுமை வழியினை
ஒர்ந்திடச் செய்தீர்கள் !
கற்றவர்கள் போராட்டம்
கண்ணியமான அறச்செயலே !
மற்றவர்கள் ஈங்கில்லை
மாணவர்கள் திரண்டதினால் !
சிற்றெறும்பு நுழையக்கூட
சிறிதளவும் இடமில்லை .
பற்றுடைய கூட்டத்தில்
பண்புடைய இளைஞர்களே!
வற்றிடுமா வங்கக்கடல்
வகையான சட்டத்தால்
உற்றவர்கள் பெற்றனரே
உறுதியான வெற்றியினை !!!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

