பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதையாதீர்கள்
பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்காதீர்களென்பார்கள்...
ஆனால், சிறுவயதிலேயே தனது தாய், தந்தையால் அண்டைவீட்டாரிடம் பேசாதேயென்று விஷமானது விதைக்கப்படுகிறதே....
நகரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவரைப் பற்றி ஒரு வீட்டாரிடம் கேட்டாலோ,
தெரியாதென்பார்கள்...
பக்கத்தில் இருப்பவர்களைப் பற்றிக் கூட தெரியாத அளவிற்கா கண்மூடித்தனமாக வாழ்வது???..
பக்கத்துவீட்டில் திருட்டு நடந்தாலும் சரி, கொலையே நடந்தாலும் சரி,
அதைப்பற்றி கவலை கொள்வோரோ, பக்கத்துவீட்டில் சென்று தவறைத் தடுப்பவரோ யாரும் இருக்க வாய்ப்பில்லை, இந்த நகர வாழ்க்கையில்...
என்ன செய்வது??. உலக வாழ்க்கையே இப்படி குருடர்களின் வாழ்க்கையாக உள்ளதே...
அருகருகிலே அமைந்த வீட்டுகளில் வாழும் மனிதர்களுக்கிடையே ஒற்றுமை என்பதே இல்லையெனில்,
அருகருகிலே அமைந்த நாடுகளில் வாழும் மனிதர்களெப்படி ஒற்றுமை கொண்டிருப்பார்கள்???
விஷத்தையே விதைத்து,
விஷத்தையே
அறுவடையாக அறுக்கிறார்கள் அன்பில்லா மனமுடையோர்...
கண்களைத் திறந்தால் தான், தெளிவான பாதையில் பயணிக்க இயலுமே தவிர கண்களை மூடிக்கொண்டு அல்ல...
இவ்வளவு சொல்கிறேனே...
உங்களின் அறிவுக்கண்கள் இன்னுமா திறக்கப்படவில்லை???...

