மனிதன்

மௌனம் ......
-----------------------
சில நேரங்களில்
நம்மை புரிய
மௌனம்
எவ்வளவு
பெரிய ஆயுதம் ....


எத்தனை
பெரிய உலகம்
எத்தனை
பெரிய நடிகர்கள் ...

மஹாபாரத
அத்தனை
கதாபாத்திரமும்
நம் முன்னால் .....

யாரும் உண்மையாய்
இருப்பதில்லை
சுயநலத்தில்
பங்குபோட படும்
நடிப்புதான்
இங்கே உறவுகளாக ....

உடுக்கை இழந்தவன்
கை போல
நட்புகள்......

விழியில் நீர்
வருவதற்குள்
துடைக்கும் கை போல
உறவுகள்

எங்கே
அவைகள்
எங்கே ..


தேடுகிறோம்
தேடுவது போல
நடிக்கிறோம்

சுயநலத்தில்
நாம் நிற்பதால்
நம் தேடுதல்
நம்மை கேலி செய்தது ....

யார் நாம் ....
நமக்கே நம்மை
விளங்கவில்லை ...

ஆற்றின் வெள்ளம் என
கடகடவென
பேசும்
நம் உள்ளத்தில்
வஞ்சம் இல்லை

யாரையும்
காயப்படுத்தும்
எண்ணமும் இல்லை ...
ஆனாலும்
திட்டமிட்டு
தாக்க படுகிறோம்

இவன் அண்ணன்
இவன் தம்பி
இவன் மாமா
இவன் மச்சான்
என்பவைகள் எல்லாம்
வார்த்தைகளில்
தொலைந்து போகின்றன ....


யாரிடமாவது
நல்ல பெயர்
வாங்கவேண்டும்
என்றால்
நம்மை
ராஜாவாக நடிக்க
வைத்து விடுகிறார்கள்

கோமாளி
என்பது காலம்
கடந்துதான்
தெரியும் ......

காதலுக்காக
ஒரு ஆண்
அழும்போதும்

அதே காதலுக்காக
ஒரு பெண் அழுகையை
மறைக்கும் போதும்
காதல் அழகாகிறது ..

அதுப்போல
வாழ்க்கையில்
அன்புக்காக
நாம் அழும் போது
நம்மை புரிந்தவர்கள்
மறைவில்
நமக்காக
அழ வேண்டும்

நட்புக்கும்
அன்புக்கும்
அதுதான் அழகு ....

நடிப்பு உலகத்தில்
இலை பார்த்து தான்
பாசங்கள்
பரிமாறப்படுகின்றன,,,,

எறும்பு
பட்டாம் பூச்சியை
காதலிக்குமா......

குருவி
யானையை
காதலிக்குமா

இனம்
இனம் பார்த்துதான்
உறவு கொள்ளும் ...

ஆனால்
மனிதன் நாயிடம்
காட்டும் பாசத்தை
சகா மனிதனிடம்
காட்டுவதில்லை ....

நம்பிக்கை இல்லா
அன்பும்
பாசமும் ......?./


குருவி

எழுதியவர் : இன்பா (28-Jan-17, 5:59 pm)
சேர்த்தது : இன்பா மு ஞாசெ
Tanglish : manithan
பார்வை : 142

மேலே