மனிதன்

*மனிதன் 🚶🏻*
****************

படிச்சி முடிச்சி கொஞ்ச வருஷம் கழிச்சி
ஒருத்தனுக்கு பள்ளிக்கூடத்துல
தமிழ் ஆசிரியராக வேலை கிடைக்குது...

வாழ்க்கையிலேயே முதன் முதலா
வேலைக்குப் போறான்...

வழக்கம் போல்
காலையில் எழுந்திருக்காமல்
சீக்கிரமாக எழுந்து

காலைகடன் அனைத்தையும் முடித்து...
புதுச்சட்டை அணிந்து...
சாப்பிட அமர்ந்தான்...

பள்ளிக்கூடம் வீட்டில் இருந்து
வெகு தொலைவில் இல்லை...
கால் மணி நேரத்துல போயிடலாம்...

வழக்கம் போல் பள்ளி
ஒன்பது மணிக்கு ஆரம்பம்....

இவன் சாப்ட்டு முடிக்க
மணி காலை எட்டு முப்பது...

பின் கைகழுவி...
தன் பையை எடுத்து
வெளியில் கிளம்பி தன் வண்டிய எடுக்க
அஞ்சு நிமிஷம் ஆச்சி...

முதல் நாள் லேட்டா போகக்கூடாதுன்னு...
அவன் வேகமாக வீட்டைவிட்டு கிளம்ப
அந்த நேரம் பார்த்து
ஒரு பூனை குறுக்க போயிடுச்சி....

வீட்டுக்குள்ள இருந்து அம்மா சொல்றாங்க...

"சகுனம் இப்ப சரியில்லப்பா....
ஒரு பத்து நிமிசம் உக்காந்துட்டு போடா..."ன்னு

இவனும் பத்து நிமிஷம் உக்காந்தான்...
மணி இப்ப எட்டே முக்கால்....

பள்ளிக்கு கிளம்பி ஒன்பது மணிக்கு
போறான்...

அங்க என்னடான்னா....
முன் கேட்ட பூட்டி...
உள்ள பிரையர் ஆரம்பிச்சிடுறாங்க...

பிரையர் முடிஞ்சி ஒன்பதேகாலுக்கு
உள்ள போனா....
இவன ஹெட்மாஸ்டர் பாத்துடுறாரு....!

உடனே இவன கூப்டு வச்சி....
கால்மணி நேரம் விடாம திட்டுறாரு...

" இப்படி முதல் நாளே லேட்டா வந்தா....
வாழ்க்கையில எப்படி முன்னுக்கு வருவன்னு..."

அவர் திட்டிமுடிச்ச பின்
வகுப்புக்கு போகும் வழியில
இவன் மனசுக்குள் தோனுது...

"நல்ல வேலை....
பூனை குறுக்க போனவுடனே
பத்து நிமிஷம் உக்காந்து வரப்போய்....
இங்க சின்ன திட்டோட போச்சி.....

இல்லைனா சகுனம் சரியில்லாம
என் வேலைய்யே போனாலும் போயிருக்கும்..."
என்று...

அந்த மரமண்டைக்கு
இன்னும் புரியல....
நாம லேட்டா வந்ததுக்குத்தான்
திட்டு விழுந்துருக்குன்னு....

இப்படித்தான் மனிதன்...
பல நேரம்...
அவன அவனே சமாதானம் செய்துகொள்கிறான்...
தன் தவறை மறைத்து...

இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (30-Jan-17, 7:13 pm)
Tanglish : manithan
பார்வை : 937

மேலே