வரமா சாபமா
ஓர் உயிரினத்தின் கடைசி பிறப்பு தான் மானுடப்பிறப்பு. மானுடப்பிறப்பின் 3 அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம்.
அதிலும் அந்த இறைவனுக்கு எத்தனை ஓர வஞ்சனை.
அனைவரும் சமமே! என்பதை விடுத்து, நம்மை தரம் பிரித்து, ஒவ்வொருக்கும் ஓர் வழி வகுத்ததேனோ?
ஒருவனுக்கு நினைத்த நேரம் விரும்பியதனைத்தும் கிடைக்கப்பெறுமாறு
வெற்றோருவனுக்கு வேண்டிய நேரம் போதுமான அளவு ஏதாவதொன்று கிடைக்கப்பெறுமாறு
மற்றோருவனுக்கு கிடைத்ததை கிடைத்த நேரம் ஏற்றுக்கொள்ளுமாறு
இது வரமா? சாபமா?