ஆசையை விட்டொழி - கட்டளைக் கலிப்பா
சோதி எங்கிலும் தீபமும் வேண்டுமே .
----- சோக கீதமும் பாடுதல் கூடுமோ
பாதி செல்வமும் நீங்கிடக் கண்டிடப்
----- பாரி லெங்கணும் சிந்தையில் வைத்திட
ஆதி அந்தமு மாண்டவன் ஒன்றென
------ ஆசை விட்டொழிப் பாயென ஓதுதல்
நீதி நன்னெறி நின்றிடும் யாவிலும்
------ நீச ரில்லையாம் நிம்மதி நாளுமே !